எப்போதுமே, “அன்பு எங்கே குறைவாக இருக்கின்றதோ, அங்கே குற்றங்கள் மிகப்பெரியதாக காணப்படும்!” என்ற முதுமொழியினை எண்ணிப் பார்த்தல் நலமானது.
ஏனெனில், விஷயங்கள் மெய்யோ, பொய்யோ, கிறிஸ்தவர் என்ற ஒருவர், எந்தவொரு சூழ்நிலையிலும் தன் சக மனிதனைப் பற்றின குற்றஞ்சாட்டும் செயலானது, கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்ளுகிற எவருக்குமே முற்றிலும் விலக்கப்பட்ட ஒன்றாகும். நம்மை நாமே நிதானித்து, சுய பரிசோதனை செய்யாமல், மற்றவர்களைப் பற்றின வீணான விமர்சனங்களால் நம் வாழ்வின் ஆயுளை கடத்திச் செல்வது ஞானமானதுமல்ல, நியாயமானதுமல்ல. குற்றங்கண்டுபிடித்தல் என்ற தீச்செயலினை வேரோடு பிடிங்கி எடுக்க இப்புத்தகம் ஓர் அருமையான வழிகாட்டி.