மனத்தாழ்மையுள்ளவர்களும், சாந்தகுணமுடையவர்களும், தன்னடக்கமுள்ளவர்களும் பாக்கியவான்கள். இவர்கள் இராஜ்யத்தைக் குறித்த நன்மையான காரியங்களை பெறுவதற்கு மட்டும் தகுதி பெறாமல், ஆண்டவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி இராஜ்யத்தில் நல்ல பங்கை பெறுவதற்கும் ஆயத்தப்படுகிறார்கள். மனத்தாழ்மையுள்ளவர்களை தேவனுடைய வாக்குறுதிகள் உற்சாகப்படுத்துகிறது. உண்மையில் இயேசுவை பின்பற்ற விரும்புவோர், அவருக்குள் இருந்த சாந்தம், அமைதல், மனத்தாழ்மை மற்றும் சரீர அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்யக்கூடிய மனநிலை – அனைத்தையும் மிக தெளிவாக உணர்ந்து, துல்லியமாகவும் பின்பற்றவேண்டும். இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக இந்த புத்தகம் நமக்கு கொடுக்கிறது.