கி.பி 1940-ல் ஒருங்கிணைந்த வேதமாணவர்களின் அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு சபைக்கு, மூப்பராக இருந்த கென்னத் W. ராசன் என்பவரே இந்த புத்தகத்தின் ஆசிரியர்.
பாஸ்டர். ரசல் தான், வேதமாணவர்களை உருவாக்கினார்; யெகோவாவின் சாட்சிகளை அல்ல; என்பதை நிருப்பிப்பதே இவர் இந்தப் புத்தகத்தை எழுதிய நோக்கமாகும். பாஸ்டர். ரசல், தான் மரிப்பதற்கு (1916) ஒரு வருடத்திற்கு முன்னதாகவே 1915-ல் தன் நிறுவனத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த ஜட்ஜ் ஜோசப் ரூதர் போர்டு என்பவரால் கி.பி 1931-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு தான், "யெகோவாவின் சாட்சிகள்
பாஸ்டர் ரசலின் மரணத்திற்கு பின்பு, ரூதர் போர்டு தன் சாதுரியத்தால் தலைமை பொறுப்பை ஏற்றது, பாஸ்டர் ரசலின் நிறுவனத்தின் பெயரை மாற்றியது, அவரின் உபதேசங்களை மாற்றியது, இதினால் ரூதர் போர்டின் தலைமைப் பொறுப்பை விரும்பாமல் வெளியேறிய வேதமாணவர்களின் நிலை, ரூதர் போர்டின் புதிய இயக்கம், யெகோவாவின் சாட்சிகள் பாஸ்டர் பாஸ்டர் ரசலின் 6 தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டு, புதிய புத்தகங்களை வெளியிட்டது, இப்படியான இன்னும் அநேக சரித்திரப் பதிவுகளை தன் சிறுவயது முதல் பார்த்த சம்பவங்களின் மூலமாகவும், பாஸ்டர் ரசலின் நெருங்கிய உறவிலிருந்த வேதமாணவர்கள் வாயிலாகவும், வேதமாணவர்கள் நடத்திய பத்திரிக்கையின் வாயிலாகவும், நடந்த உண்மைகளை சரித்திரப் பின்னணி பதிவுகளின் மூலமாகவும் தெளிவாக விளக்கிக் காண்பிக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் மிகச் சிறப்பம்சமாகும்.