பெருமை என்பது ஒருவர் “தான்” என்ற தன்னுடைய வளமான மண்ணில் தனக்குள் தானே விதைத்துக்கொள்ளும் விதையாகிய சுயநலமே ஆகும். இது சுயநலத்தினுடைய உருமாற்றமேமேயாகும். இப்பேர்ப்பட்ட பெருமை நம்மில் காணப்படுகிறதா? என நாமொவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் நிச்சயம் நிதானித்துப் பார்க்க வேண்டுவது அவசியமாகிறது.
புற்றுநோய்க்கொத்த மனநோயாகிய இந்த பெருமை ஒருவருக்குள் எவ்விதம் சுயநலத்தின் வேராகக் காணப்படுகிறதென்றும், அவற்றை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளலாமென்றும் அவற்றை மேற்கொள்வது எவ்வளவு கடினமானது, ஆனால் அதேசமயம் அதைப் புறக்கணிப்பது எவ்வளவு அவசியமானமென்றும் இப்புத்தகத்தின் மூலம் வாசித்தறியலாம்.
சத்திய வேதத்தில் I பேதுரு 5 – ஆம் அதிகாரம் 5ஆம் வசனத்தின் படி பார்க்கையில் அண்டசராசரங்களையும் சிஷ்டித்த தேவனானவர், மனிதரில் ஒருவரை எதிர்த்து நிற்பார் என்றால் அது பெருமையென்னும் சுயமேட்டிமையுடைய ஒருவரையேயாகும். ஆகவே பெருமை எனும் மனநோய்க்கு மாபெரும் மாற்று மருந்தாக காணப்படும் தாழ்மையை நமக்காக உட்கொள்வதோடு மாத்திரமல்லாமல் அதை நம்மைச்சுற்றி அணிந்து கொள்ளும் முயற்சியினை நாம் அடியெடுத்து வைக்க இப்புத்தகத்தின் 24 பக்கங்களுக்குள் பயணம் செய்வோமாக…..