VIEWS

PageS
0

போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள்

நம்முடைய ஏழாம் தூதனின் சத்திய வெளிச்சம் நிறைந்த கட்டுரைகளின் வரிசையில், “போக்காட்டினால் சுமக்கப்படும் பாவங்கள்” தொடர்பாக எழுதப்பட்ட இக்கட்டுரைகளின் தொகுப்பானது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ ஜனங்களுக்கு, இப்போது ஊதப்படும் கடைசி எக்காளத்தின் காலகட்டங்களில் நம் யாவருக்கும் எச்சரிக்கையூட்டும் பக்கங்களையுடைய கட்டுரைகளாக உள்ளன.

லேவியராகமம் 16 – ஆம் அதிகாரத்தின் மீது மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட, அர்ப்பணிப்புள்ள தியானத்தின் விளைவே – இக்கட்டுரைகளாகும் .

நம்மையே தத்தம் செய்துவிட, உம் சித்தமே செய்ய வருகிறேன்!! என்று பிரதிஷ்டைக்குட்படும் ஒரு சகோதரன்/சகோதரி தடம் புரண்டால்??? எப்பேர்ப்பட்ட இழப்பினை சந்திக்க நேரிடுகிறது!! என்ற கோணத்திலான பாடங்களும், நாம் பெற்றுக் கொண்ட உக்கிராணத்துவமும், சிலாக்கியங்களும், ஆவிக்குரிய அநுக்கிரகங்களும் இழக்கவே கூடாதவைகளாகும் என்ற கோணத்திலான பலமான ஆலோசனைகளும், நமக்கு அதிமுக்கிய தேவைகளாக இருக்கின்றன.

போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவாக நாமில்லாமல், கர்த்தருக்கென்று சீட்டுப் போடப்பட்ட வெள்ளாட்டுக்கடாவின் தன்மை உடையவர்களாக இருப்போமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *