தேவனுடைய வல்லமை / ஆவி வெளிப்படும் எல்லா சந்தர்பங்களிலும், அது ஒரு விளைவை ஏற்படுத்தும். வேதாகம குறிப்புகளை பார்க்கும்போது, பரிசுத்த ஆவி எங்கெல்லாம் அனுப்பிவைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் அது எப்போதுமே விளைவை/பலனை/கனியினை கொண்டுவந்திருக்கிறது. அந்த வல்லமை/ஆவி நமக்கும் கொடுக்கப்பட்டு நாமும் கையாண்டுகொண்டிருக்கிறோம் என்றால், நம் விஷயத்திலும் பலன்கள்/கனிகள் எதிர்பாக்கபடும் அல்லவா? ஆம், நம் விஷயத்தில் எதிர்பார்க்கப்படும் பலன்கள் / கனிகள் காலாத்தியர் 5:22,23-ஆம் வசனங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதில் முதலும், பிரதானமானதுமாயிருக்கும் அன்பை குறித்து இந்த பாடம் பேசுகிறது.