“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாய் இருக்கும்படி, “பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”
இந்தப் பொறுமையானது சகல நல்ல குணங்களுக்கும் எளிதாக வழிவகுக்கும். ஏனெனில், மற்ற அனைத்து குணங்களையும், பொறுமையின் தொடர்ச்சியான கிரியைகள் மூலமே வளர்ச்சியடைய செய்ய முடியும். பொறுமையை செயலாற்றாமல் கிறிஸ்த வாழ்க்கையில் நாம் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. மேலும் பொறுமையின் அளவு, நமக்குள் இருக்கும் விசுவாசத்தின் அளவை எளிதில் கணித்துவிடும். எப்போதும் பதற்றமாகவும், அமைதியற்ற மனநிலையும் உடைய கிறிஸ்தவர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். அவர்களுக்குள் விசுவாசம் இருந்தால், தேவனுடைய வாக்குறுதிகள் மேல் நம்பிக்கை வைத்து பொறுமையாக காத்திருப்பார்கள். இன்றைக்குள்ள தேவனுடைய பிள்ளைகளுக்கு, தேவனுக்காகக் காத்திருக்கும் விசுவாசம், நீடிய பொறுமை என்னும் மிகப்பெரிய பாடங்களை இந்த புத்தகம் நம்மக்கு கற்றுத் தருகிறது.