ஒருவேளை, நீங்கள் இச்சோதனையை இதுவரையில் அனுபவிக்காமல் இருக்கலாம். இல்லையேல், எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கலாம். அல்லது, ஏற்கனவே அனுபவித்திருக்கலாம், அல்லது இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கலாம்…””
இப்பாடமானது இச்சோதனையைக் குறித்தும், அதனைச் சரியாக அணுகுவது குறித்தும், பல வேதாகம உதாரணங்களைக் கொண்டு விளக்கமளிக்கிறது. கூடுதலான சத்திய கருத்துகளாக, இந்தச் சோதனையில் நமக்கு உதவுகிற சகோ. ரசல் அவர்களின் சில ஆலோசனைகளும், சம்பந்தப்பட்ட வசனத்தின் விளக்கவுரையும் இணைக்கப்பட்டுள்ளன.
பாட ஆதாரம் : Christian Resources App > Audio Sermons > "Ric Cunningham - The Trial of Comparison"