“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்று நம் பரலோகப் பிதா கூறியுள்ளார். இந்தத் திருஷ்டாந்தமானது புறஜாதியாரிடையே நிலவிவந்த ஒரு பழக்கவழக்கத்திலிருந்து பெறப்பட்டதாகும். பிரயாணம் பண்ணுகின்ற வேளையில், புதிய நாட்டங்களும் கவர்ச்சிகளும் தங்கள் சிந்தையைக் கவர்ந்து, தங்களுக்கு விருப்பமான தெய்வங்களை மறக்கச் செய்துவிடாதபடி, அத்தெய்வங்களை இடைவிடாது தங்கள் மனக்கண்முன் நிறுத்துவதற்காக, அத்தெய்வங்களின் உருவத்தை அவர்கள் தங்கள் உள்ளங்கைகளில் stamped/பதித்துக்கொண்டார்கள். தம்முடைய பிள்ளைகளாகிய நம்மை தாம் ஒருபோதும் பாராமுகமாய் விடுவதுமில்லை, மறந்துவிடுவதுமில்லை என்பதை இந்த விளக்கத்தின் மூலமாய் நம் பரலோகப் பிதா நமக்கு உணர்த்துகின்றார். அவரது திருக்கரங்களினுடைய உள்ளங்கைகளில் நாம் engraven/பொறிக்கப்பட்டிருப்பதைக் குறித்துச் சற்று சிந்தித்துப்பாருங்கள்!
Bible Students Library