இந்த பாதங்கழுவுதல் நடைமுறையானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு சம்பங்களில் இடம்பெற்றுள்ளது. பாதங்கழுவுதல் என்பது அன்பின் ஆவியினை ஊழியத்தின் ஆவியினை மற்றும் மனத்தாழ்மையின் ஆவியினை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கிறது. இது இஸ்ரயேலருக்கு பாரம்பரிய வழக்கமாய் இருப்பினும் சர்வலோகத்துக்கும் இராஜாவாய் இருக்கிற தேவனுடைய குமாரனே கனம் குறைந்த அற்பமான இந்த பாதம் கழுவும் ஊழியத்தை மனப்புர்வமாய் செய்தார்.
நாமும் நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்கவேண்டுமானால் இந்த பாதம் கழுவுதலுக்கு அடையாளமான ஊழியத்தினை அது எவ்வளவு கனம் குறைந்தாக இருந்தாலும் நாம் தவிர்த்துக்கொள்ள கூடாது. ஆகையால் பாதம் கழுவுதலானது எவைகளையெல்லாம் உள்ளடக்கும் என்றும் இந்த ஊழியத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி செய்யலாம் என்றும் இப்புத்தகத்தை படிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.