உலகத்தைப் பொறுத்தவரையில் பொது கணக்குப்பார்த்து தீர்க்கும் நாள் பழைய கடந்த வருடத்தின் இறுதியிலும், புதிய வருடத்தின் ஆரம்பத்திலும் நிகழ்கின்றது. ஆனால், சபையைப் பொறுத்தவரையிலும்கூட இப்படியாக கணக்குப்பார்க்கும் தருணமானது, வருடந்தோறும் நினைவுக்கூரும் காலங்களில் அமைவது பொறுத்தமானதாகும்.
நாம் கடந்த வருடம் மீட்பருடைய பலியையும், அவரோடுகூட நாமும் பங்குக்கொள்வதற்கு அடையாளமாய் அப்பத்தைப் பிட்டது முதல்கொண்டு நம்முடைய ஆவிக்குரிய கணக்குகள் எப்படி காணப்படுகின்றது என்பதை பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என, ஏழாம் தூதன் மூலம் கொடுக்கப்பட்ட ஆலோசனை கட்டுரை இது.
இப்பாடத்தை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய மனசாட்சியின்படி தங்கள் ஜீவியத்தை தராசு தட்டில் வைத்துப்பார்த்து, கடந்த வருடத்தைக் காட்டிலும் இப்பொழுதுள்ள தனது ஜீவியத்தின் நிலையை (நன்றாக உள்ளது அல்லது நன்றாக இல்லை என்று) தராசு தட்டின் மூலம் அறிந்துகொண்டு சந்தோஷத்துடனே பந்தியில் பங்கெடுக்க கிறிஸ்துவுக்குள்ளான வாழ்த்துக்கள்!