ஒரு துளி கூட சந்தேகம் இல்லாமல், முன்னோக்கி செல்லும் பாதையில் முற்றிலும் உறுதியாயிருக்கும் ஒரு தலைவர் நம்மிடத்தில் இருக்கும்போது அது பெரும் ஆறுதல் அளிக்கிறது. நாம் அவரை என்றும் நம்பும்படியான, எண்ணிப் பார்க்க முடியாத தலைமை துவத்தை அவர் காண்பித்தார்.
ஆம், கர்த்தர் இயேசு தனது மரணத்திற்கு, சீஷர்களை ஆயத்தப்படுத்தி, போதித்து உற்சாகப்படுத்தினார். ஏனென்றால் இனி நடக்கவிருக்கும் காரியங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியாகவும், திகிலூட்டும்படியாகவும் இருக்கபோகிறது என்பதை நன்கு அறிந்திருந்தார். அவர்களின் அபூரண மனம், அவர்களை அனுமதிக்கும் அளவுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அன்றிரவு அவர் தனது வார்த்தைகளாலும், கிரியைகளாலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது அசாதாரணமானது. அவைகளை நாமும் கற்றுக்கொள்ளும்படிக்கு இப்புத்தகத்தை ஜெபத்துடன் பகிர்ந்துகொள்கிறோம்!