நம்முடைய வேதமானது எவ்விதம் இவ்வுலகத்திலுள்ள மற்றெல்லா புத்தகங்களைக் காட்டிலும் உயர்ந்ததும், உன்னதமுமானதாக இருக்கின்றதோ, அதுபோலவே, இந்த வேதாகம சொற்களஞ்சியமும் நம்முடைய பரிசுத்த வேதாகமத்தினை நன்கு ஆய்ந்தறிய உற்ற நண்பனாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
வேதத்தினை, ‘பசுக்கள் நுனிப்புல் மேய்வது போல’ படிப்பதற்கும், நமது ஆண்டவராகிய கர்த்தர் இயேசு யோவான் சுவிசேஷ புத்தகம், ஐந்தாம் அதிகாரம் 39ம் வசனத்தில், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.” என்று கூறியபடி ஆராய்ந்து படிப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
எனவேதான், வேதாகமத்தை முறையாக கற்றுக் கொள்வது எப்படி என்கிற ஒரு படிப்பினையை, தன் கிறிஸ்தவ ஓட்டத்தின் கடைசி தருணம் வரைக்கும் அவரது வேத ஆராய்ச்சியில் ‘அகரம்’ முதல் ‘னகரம்’ வரைக்குமான தமிழ் எழுத்துக்களை தலைப்புவாரியாகவும் ஒவ்வொரு தமிழ்ச் சொற்களுக்கும் இணையான ஆங்கில [Parallel English Rendering] மொழிபெயர்ப்புகளுடனும், ஆர்வத்துடனும் சுலபமாகவும் எளிமையாகவும் பிரியத்துடனும் தேடி கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை இந்த வேதாகம சொற்களஞ்சியமானது தங்களுக்கு நல்கும் என்பதினை நாங்கள் பணிவுடன் நம்புகின்றோம்.