சர்வ வல்லவரின் திட்டத்தில் கர்த்தர் இயேசுவின் பலி, அனேக திட்டங்களுக்கும், ஆசீர்வாதங்களும், மகிமையையும் துவக்கி வைக்கும் மாபெரும் பலியாக உள்ளது. இயேசுவின் மனிஷீக ஜீவ – உரிமைகள் என்ற இந்த புத்தகத்தின் வாயிலாக கர்த்தர் செலுத்திய பலியில் உள்ள புண்ணியங்கள், தேவனுக்கும் இயேசுவிற்கும் இடையேயான அன்பின் உறவு, நியாயப்பிரமாண நிறைவேறுதல், ஜீவிக்க உரிமை பெற்றும் அதை தேவனிடம் அற்பணித்த இயேசுவின் கீழ்ப்படிதல், ஈடுபலியின் புண்ணியத்தின் வாயிலாக சபை அடையும் இலக்கியங்கள், கர்த்தரும் சபையும் இணைந்து உலக ஜனத்திற்கு தரும் ஆசீர்வாதங்கள் மற்றும் இன்னும் மேலான அனேக ஆழமான அர்த்தங்களை இந்த புத்தகத்தில் காண தேவன், மாபெரும் கிருபை செய்துள்ளார். சகோ.ரசல் அவர்களின் எழுத்துக்களிலிருந்து இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.