கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” பிலிப்பியர் 3:14
புதுச்சிருஷ்டியின் இலக்கு என்பது அர்ப்பணிப்பு (Baptism) செய்வதை மட்டும் குறிப்பது அல்ல. இலக்கு என்பது கிறிஸ்துவின் சாயல் ஆகும். அதாவது குணலட்சனத்திற்கான தரநிலை ஆகும். மேலும் இலக்கை அடைவதற்கான குணலட்சன வளர்ச்சியின் நோக்கம் மற்றும் அவற்றின் அவசியம் என்ன என்றும் இந்த ஓட்டத்திற்கான நிபந்தனை என்ன என்றும் எப்படி இலக்கில் உறுதியாய் நிலைத்திருக்கலாம் என்றும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துவுக்கேற்ற குணலட்சனத்தை அடைந்து விட்டோமா? என சோதித்துப்பார்க்க இப்புத்தகம் நமக்கு உதவியாக இருக்கும்.
புதுச்சிருஷ்டி அடைய வேண்டிய இலக்குத் தொடர்பாக சகோ. ரசல் அவர்களினால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் உள்ளது.