நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றின, அநேக விசுவாசமுள்ள தேவ பிள்ளைகளை வேதாகம பாடங்களில் தியானித்திருப்போம். அதைத் தொடர்ந்து, அதே போன்று இந்த சுவிசேஷ யுகத்தில் வாழ்ந்து வருகிற நமக்கு, விசுவாசமுள்ள பரிசுத்தவான்களின் பதிவுகள், இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டதுடன், அவர்கள் தங்கள் தலைவரும் குருவுமானவருடைய அடிச்சுவடுகளில், தங்களின் ஜீவனையும் பொருட்டாக எண்ணாமல் நடந்து சென்றனர் என்பதை பார்க்கும்போது, நமக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதை உணர்கிறோம். இவர்களில் அநேகர் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவர். நாம் அவற்றைக் நோக்கும் போது, நம்மைப் போன்று பாடுள்ள மனிதராக இருந்து, வாழ்ந்து பல யுத்தங்கள் மத்தியிலும், வேதனைகள், சோதனைகள் மத்தியிலும் தங்களின் வேலை, செல்வம், பிரியமான காரியங்கள் யாரையும் உதறிவிட்டு சத்தியத்திற்காக, நமது காலத்திற்கு சற்று முன்பதாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தியானிக்கும்போது, அவர்களின் வாழ்க்கையின் சுயசரிதைகள் வாயிலாக நமக்கு எச்சரிப்பும், ஆறுதல்களும், நமது ஓட்டத்தை விரைவுபடுத்த உற்சாகப்படுத்தும் பதிவாக, தூண்டி எழுப்பும் புத்தகமாக "சுய சரிதைகள்" புத்தகம் பெரிதும் உதவுகிறது.