பிரியமானவர்களே, நமது இரட்சகரின் முதலாம் வருகையில், அவர் போதித்த உபதேசங்களும், உவமைகளும் தேவனின் இராஜ்யத்தை பற்றியே இருந்தது. இத்தகைய தேவனின் இராஜ்யத்தின் ஆயத்த காலங்களை பற்றியும், இராஜ்யத்தை பற்றியும், அதன் ஏற்பாட்டிற்கு தேவன் நியமித்த காலங்களை சத்திய வேதத்தின் மூலம் ஆராய்ந்து, தேவனின் இராஜ்யத்தின் செயல்பாடுகளை எளிதாக புரிந்துகொள்ள, இந்த “உம்முடைய ராஜ்யம் வருவதாக – தொகுதி 3 புத்தகத்தை ஆழமாக ஆராய்வது அவசியமாக உள்ளது. இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை வினா-விடை வாயிலாக, மேலும் ஆழ்ந்து, தேவ ஆவியின் துணையோடு, தியானிக்கும் போது, நமது சத்திய அறிவு இன்னும் தேவனுடைய திட்டத்திற்கு இசைவாக கொண்டு செல்ல இந்த புத்தகம் உதவுகிறது.