அர்மகெதோன் என்ற வார்த்தை மற்றும் அதன் தாக்கங்களைக் கருத்தில் கொண்ட பலருடைய இதயங்களில் இது திகிலூட்டுகிறது. நாம் வாழும் உலகமானது, மாபெரும் 2 உலக போர்களை சந்தித்துள்ளது. தற்காலத்தில், இனி இத்தகைய உலக போர் வராதபடி பல நாடுகள், பல உடன்படிக்கைகள் செய்தாலும், தேவன் அவரது தெய்வீக திட்டத்தில் இதை வைத்திருக்கிறார். அர்மகெதோன் போர் அடையாளப்பூர்வமான பாபிலோனையும் அதன் இறுதி முடிவை அது எவ்வாறு சந்திக்கும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. அதன் ஆயத்த நடவடிக்கைகள், அந்த ஆயத்த வேளையில் அந்திகிறிஸ்து அமைப்பின் பங்கு பற்றியும், அந்த அமைப்பின் வீழ்ச்சி பற்றியும், தேவனின் இராஜ்யம் ஆயத்தமாக ஏற்படும் உலக நாடுகள் மத்தியிலான யுத்தங்கள் பற்றியும், இந்த சுவிசேஷ யுகத்தின் சதாப்தத்தின் முடிவை பற்றியும் சத்திய வேதத்தில் தேவன் மறைத்து வைத்திருந்த இரகசியமானது, இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தினை பெரோயா பட்டணத்தார் போன்று மனோ வாஞ்சையாக, வினா விடை வாயிலாக, தியானிக்கும் போது, மேலும் அனேக தெளிவுகளை நாம் அடைய முடிகிறது.