தேவன் ஆபிரகாம் மூலம் அவருடைய சந்ததியாகிய இஸ்ரயேல் ஜனங்களை, சில நிபந்தனைகளின் அடிப்படையில் தனக்கென சொந்த ஜனமாக தெரிந்துகொண்டு, அவர்கள் தன்னுடைய கற்பனைகளையும், பிரமாணங்களையும் கைகொண்டு நடப்பதின் மூலமாக, தன்னுடைய நீதியையும், பரிசுத்தத்தையும் அறிந்து கொள்ள, மோசேயின் மூலம் சீனாய் வனாந்தரத்தில், தன்னுடைய கற்பனைகளும் பிரமாணங்களும் அடங்கிய 613 நியாப்பிரமாண கட்டளைகளை கொடுத்து, அவர்களுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்ப்படுத்தினார்.
இந்த நியாப்பிரமாண கட்டளைகள் தனித்தனி தலைப்பில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதை இந்த புத்தகத்தில் காணலாம். இஸ்ரயேலர்களால் தோரா என்றழைக்க்ப்படும் ஐந்து ஆகமங்களான ஆதியாகமம் முதல் உபாகமம் வரையுள்ள வேதாகம புத்தகங்களிலிருந்தே இந்தக் கட்டளைகள் எடுக்கப்பட்டுள்ளது.