கிறிஸ்துவின் ஆவிக்குரிய மணவாட்டியாக அழைக்கப்பட்ட நமக்கு, இப்பூமியில் காணப்படும் சில முக்கியமான பூமிக்குரிய கடமைகளில், விவாகம் என்ற ஒன்று கட்டுக்கோப்பாக கொண்டுச் செல்லப்பட வேண்டிய தொன்றாகவுள்ளது.
எபிரேயர் 13- ஆம் அதிகாரம் 4 ஆம் வசனத்தின் படி, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக.” என்று நாம் ஆலோசனை கூறப்படுகின்றோம். அப்பேர்ப்பட்ட திருமண உறவு, சிலருக்கு அக்கினியினால் நிறைந்த உலைக்களத்தைப்போலும், சீர்படுத்த அரிதான உறவுச்சிக்கல்களினாலும், எண்ணிறைந்த விவாகரத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதும், மறுமணங்கள் யோசிக்கப்படுவதும் நம்மால் காணமுடிகின்றது.
ஆனால், திருமணத்தைப் பற்றின தேவ நோக்கம்தான் என்ன?, மறுமணத்தைக் குறித்ததான தெய்வீக நிலைப்பாடுதான் என்ன?, என்பதினை அறியவும்,ஒரு வெற்றிகரமான தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய தம்பதியினரின் சாட்சியினை நாம் நம்முடையதாக்கவும், இச்சிறு எழுத்துப்பேழையின் மூலமாக நம்மை வழிநடத்துகின்றது. வாசித்து அறிவோமாக…. ஆமென்.