கிறிஸ்துவின் பின்னடியார்களாக அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அர்ப்பணிப்பு வாழ்வில் முன்னேற, “நினைவு கூறுதலின் தியானங்கள்” என்றதோர் ஒப்பற்ற படைப்பினை நாம் பெற்றிருக்கின்றோம். இது நமது கிறிஸ்துவுக்குள்ளான மூத்த சகோதரரின் எழுதுகோலின் மூலம் வெளியான மாபெரும் “பஸ்கா” சத்தியங்களாகும்.
ஒப்பற்ற அந்த சத்திய தியானங்களிலிருந்து, “அடையாளங்களின் அர்த்தங்கள் ” என்ற ரீதியில், அதன் உள்ளான மற்றும் முதன்மையான ஆவிக்குரிய அர்த்தங்களை புரிந்து கொள்ளும் விதமாகவும், எதிர்வரும் புதுசிருஷ்டியின் பஸ்காவில், யார் பங்கு கொள்ளலாம்? யார் அபாத்திரவான்? எது நம்மை ஆக்கினைக்குள்ளாக்கும்? எது நம்மை அடையாள அர்த்தங்களோடு நம்முடைய தனிப்பட்ட வாழ்வினைப் பொறுத்துக்கின்றது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக உருவானதே இத்தொகுப்பு.
ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதுசிருஷ்டியின் பிரதிஷ்டையினுடைய ஆழம், இந்த அடையாள (சின்னங்களின் ) அர்த்தங்களை புரிந்துக்கொள்வதில் தான் உள்ளது.