VIEWS

PageS
0

மழலையர் மன்னா – 5 வயதுக்கு கீழ்

“உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” ஏசா 54:13நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது அவர் செய்த அதிசயங்களை கண்ட சிறு பிள்ளைகள், ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று தேவாலயத்திலே ஆர்ப்பரித்தார்கள். அது போல நம் கர்ப்பத்தின் கனியான நம் பிள்ளைகளும் வரக்கூடிய ஆயிரவருட ராஜ்யத்தில் கர்த்தரின் செயல்களைக் கண்டு துதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அன்னாள் கர்த்தருக்கேற்ற காரியங்களை தன் சிறுபிள்ளையான சாமுயேலுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்தியது போல தேவபக்திக்கு ஏதுவான கீழ்ப்படிதல்களை, 5 வயதிற்குட்பட்ட மழலைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில், இந்த மழலையர் மன்னா உருவாக்கப்பட்டுள்ளது.ஆதாம், காயீன், ஆபேல் மூலம் கற்க வேண்டிய போதனைகளும், நோவா, ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக், சாமுயேல் மூலம் கீழ்ப்படிதலும், ஆகமங்களும், சுவிசேஷகங்களும், இயேசுகிறிஸ்துவின் பிறப்பும், அற்புதங்களும், என அநேக சத்தியப்பாடங்கள் துதித்துப்பாடும் பாடல்களாகவும் மற்றும் குழந்தைகளை கவரக்கூடிய வகையில் அழகான வண்ணப் படங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *