நம்முடைய பிதாவாகிய தேவன் பாவத்திலும் மரணத்திலும் அமிழ்ந்துள்ள மனுகுலத்தாரை ஆசீர்வாதமான நிலைக்கு திரும்பக் கொண்டுவருவதற்கான சீரமைக்கும் திட்டத்தை, தம்மால் முன் குறிக்கப்பட்ட காலக்கிரமத்திற்கு இசைய, தமது குமாரன் மூலம் செயல்படுத்தி கொண்டு இருக்கிறார். மனுக்குலம் சீர்பொருந்தும் இந்த மகத்தான திட்டத்தை குறித்து பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தீர்க்கதரிகளால் எழுதப்பட்ட தீர்க்கதரிசணங்களையும் அவற்றின் நிறைவேறுதல்களையும் நாம் புரிந்து கொள்வதற்கு வேதாகம காலக்கணக்கு ஒரு கருவியாக உள்ளது.
தேவனால் வகுக்கப்பட்ட இந்த தேவதிட்டங்களின் காலக்கணக்கு அம்சங்கள் அவர் நியமித்தப்படியே நிறைவேறி வருகிறதையும், உலக வரலாற்று நிகழ்வுகளுடன் அவைகளை ஒப்பிட்டு பார்த்தும் நம்முடைய விசுவாசத்திற்கு வலிமைசேர்க்கும்படியாகவும் சகோ.ரசல் அவர்களால் கொடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு இந்த “வேதாகம காலக்கணக்கு”புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.