கர்த்தருடைய நினைவுகூருதலைத் தொடர்ந்து மறுநாள் நமது இரட்சகர் ஈடுபலியாக தமது ஜீவனை ஈந்தார் என்று வேதம் சொல்கிறது.
ஒருவேளை கர்த்தராகிய இயேசுவிற்கென்று ஓர் இறுதி அடக்க ஆராதனை (funeral service) நடந்து, அதில் நீங்கள் கலந்துகொள்ள உங்களுக்கு அனுமதி கிடைத்தால், அதை நடத்தும் ஊழியனோ அல்லது போதகரோ என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்? ஒருவேளை நேசருக்கான அடக்க ஆராதனையை நடத்தும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவர் தமது மூன்றரை ஆண்டு ஊழியத்தில் கொடுத்த அனைத்து போதனைகளையும், செய்த அனைத்து அற்புதங்களையும் எவ்வாறெல்லாம் ஓர் அடக்க ஆராதனை பேச்சிற்குள் சுருக்கிக் கூறுவீர்கள்? அவருடைய போதனைகளில் அல்லது அற்புதங்களில் எவற்றை மிகவும் முக்கியமானதாக எண்ணிப்பார்ப்போம்? ஆம்! நமது கர்த்தராகிய இயேசுவை நினைவுகூரும் வண்ணமாக இருக்கும் இந்த “அன்பு ஆண்டவருக்கான அடக்க ஆராதனை” எனும் பாடத்தில் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முயற்சித்துள்ளோம்.