VIEWS

PageS
0

அன்புச் சகோதரிகளே

“அன்புச் சகோதரிகளே!” எனும் இப்புத்தகமானது சகோ. Todd Alexander என்பவர் ஆற்றிய “Seven Women Architects of Redemption” எனும் ஆங்கில பிரசங்கத்தின் தமிழாக்கமாகும்.

– உலகம் மாபெரும் மீட்பை எதிர்நோக்கியிருக்கும் இந்த நமது நாட்களைப் போலவே, வேதாகம சரித்திரத்திலும் இரண்டு மாபெரும் மீட்பின் நாயகர்களாகத் திகழ்ந்த மோசே மற்றும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் பிறப்பு மற்றும் ஊழியத்தின் போது, அவர்களுக்கு உறுதுணையாக தேவன் முக்கியமாக தலா ஏழு பெண்கள் என மொத்தம் பதினான்கு பெண்களைப் பயன்படுத்தி இருந்தார்.

– இந்த விசுவாசமும் பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் யார் யார், அவர்கள் எப்பேர்ப்பட்ட குணலட்சணத்தை வெளிப்படுத்தினார்கள், அவர்கள் எவ்வாறு தேவனுக்கு மாத்திரம் அஞ்சி நடந்தார்கள், சிதைந்து கிடக்கும் இவ்வுலகத்தின் மத்தியில், நமது சக சகோதரிகளும் இந்த விசுவாச வீரமங்கைகளிடமிருந்து ஊக்கம் பெற்றவர்களாய், எவ்வாறெல்லாம் தங்களைச் செதுக்கிக் கொண்டு, தேவ பணிகளில் மனத்தாழ்மையில் பங்களிக்கலாம் என்பது போன்றவற்றை விளக்குவதே இப்பாடத்தின் சாராம்சமாகும்.

– இப்படியாக, தேவன் நமக்களித்துள்ள நமது அன்புக்குரிய சக சகோதரிகள் அனைவருக்காகவும், அவர்கள் மூலமாக தேவன் நமக்குப் பகிர்ந்து அளித்து வருகிற அநேக உதவிகளுக்காகவும், தேவனுக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நாம் உரித்தாக்குகின்றோம்.

– நம் அனைவர் சார்பான மனப்பூர்வமான நன்றியுடன்கூடிய நளத தைலமாகிய, “அன்புச் சகோதரிகளே” என்கிற இச்சிறு புத்தகத்தை, தேவ நாமம் மகிமைப்படும்படியாக, எங்குமுள்ள புதுச் சிருஷ்டிகளுக்கென்று ஜெபத்தோடும் அன்போடும் அர்ப்பணிக்கின்றோம். தேவனுக்கு நன்றி!

Facebook
WhatsApp
Telegram
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *