– “நமது வனாந்தரப் பிரயாணங்கள்” எனும் இப்புத்தகமானது, இஸ்ரயேலரின் வனாந்தரப் பிரயாணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான சகோ. Anton Frey அவர்களின் “Our Wilderness Wanderings” என்கிற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமாகும்.
– இப்புத்தகமானது, இரட்சகனாகிய மோசேயின் தலைமையின் கீழ் மாம்சீக இஸ்ரயேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, வாக்களிக்கப்பட்ட கானான் நோக்கி ஏறெடுத்திட்ட பிரயாணத்தில், அவர்களுக்குச் சம்பவித்த சோதனையான அனுபவங்கள் குறித்தும், சர்வவல்ல தேவன் தம் ஜனங்களை எவ்வாறெல்லாம் அதிசயமாக வழிநடத்தினார் என்பது குறித்தும் விளக்குகிறது.
– மேலும், இவை அனைத்தின் மத்தியில் விசுவாசமுள்ள மற்றும் விசுவாசமில்லாத மாம்சீக மனுஷன் எவ்வாறெல்லாம் செயல்படுவான் என்பது குறித்தும், நிழல்களாகவும் திருஷ்டாந்தங்களாகவும் அவர்களுக்குச் சம்பவித்த இவையெல்லாவற்றிலிருந்தும் உலகத்தின் முடிவு காலத்திலுள்ள ஆவிக்குரிய இஸ்ரயேலர் கற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனையான மற்றும் எச்சரிக்கையான பாடங்கள் யாவை என்பது குறித்தும் நமக்கு விவரிக்கின்றது.
– இஸ்ரயேல் சரித்திரத்தின் மிக முக்கியமான காலப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இப்பாடங்கள், பரம கானான் நோக்கிப் பிரயாணம் செய்யும் நாம் நம்முடைய அழைப்பிற்குப் பாத்திரமாய் நடந்து கொள்வதற்கும், ஆவிக்குரிய வகையில் நம்மை நாமே நிதானித்துச் சீர்செய்து கொள்வதற்கும் உதவும் வண்ணமாக அமைந்துள்ளன.
– இங்ஙனம், தேவ கிருபையில், எங்குமுள்ள புதுச் சிருஷ்டிகளின் ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கென்று இப்புத்தகத்தினை ஜெபத்தோடும் அன்போடும் அர்ப்பணிக்கின்றோம். நன்றி!
One Comment
Glory to our ALMIGHTY GOD In the name of our Jesus christ…Thank you brothers & sisters