தீமை மனுக்குலத்தை மட்டும் வேதனைப்பட செய்யவில்லை; தேவனையும் வேதனைப்படச் செய்கிறது. ஆம்! மனிதன் துயருறும் போது, தேவனும் துயரப்படுகிறார். தேவனால் துன்பப்பட முடியாது என்று கூறுபவர்கள், அப்படியானால் தேவனால் அன்புகூர மட்டும் முடியுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.
இந்தக் கட்டுரையில், தமது பிள்ளைகளுடைய துன்பங்களில் பங்கெடுக்கும் தேவனுடைய தகப்பனுக்குரிய அன்பின் நேசத்தினையும், பின்னர், மனிதனுடைய துன்பம் மற்றும் தேவனுடைய துன்பம் என இரண்டின் பின்னணியில், “தேவன் ஏன் தீமையை அனுமதித்தார்?” என்கிற கேள்விக்கு வேதவாக்கியங்களின் அடிப்படையிலும் விடையைக் காணப்போம்.