சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்பு, 1910 – ஆம் வருஷம், ஜூன் 5 – ஆம் தேதியன்று, பாலஸ்தீனத்திற்குப் பிரயாணம் செய்துவந்தவுடனே அமெரிக்காவில் சகோ. ரசல் அவர்கள் யூதர்களும் குழுமியிருந்த கூட்டத்தின் மத்தியில் “எருசலேம்” எனும் இந்தப் பிரசங்கத்தைப் பிரசங்கித்தார். இது யூதர்கள் பலரது கவனத்தை ஈர்த்த பிரசங்கமாகும். யூதர்கள் மீண்டும் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் இது அவர்களுக்கு நம்பிக்கையளித்தது. அக்காலத்தில், இது பெரிய பெரிய செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி, அமெரிக்காவிலும், கனடாவிலும் சுமார் பதினைந்து மில்லியன் ஜனங்களைச் சென்றடைந்ததாகக் கணக்கிடப்பட்டது. இதிலுள்ள பல பாடங்கள் நமது நாட்களுக்கும்கூட பொருந்தும் வண்ணமாக பசுமையானதாக இருக்கின்றது.
இச்சிறு புத்தகம் தேவன்பேரிலும், அவருடைய வாக்குத்தத்தங்கள்பேரிலுமான நமது விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும் என்கிற தேவ நம்பிக்கையில், ஜெபத்துடன் தாழ்மையாகப் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே!