
இஸ்ரயேல்: முன்குறிக்கப்பட்ட முடிவுடன் ஒரு சந்திப்பு
-
• Pages 58
-
• Size 17.8MB
-
• Publisher Bible Students Tamilnadu
-
• Uploaded May 5, 2022
இஸ்ரயேல்: முன்குறிக்கப்பட்ட முடிவுடன் ஒரு சந்திப்பு
யூதர்கள் தங்களுடைய யூதப் பாரம்பரியத்தின்படி, யூத மாதமாகிய இயார் மாதம், 5 – ஆம் தேதியைத் தங்களுடைய சுதந்திர தினமாகக் கொண்டாடிவருகிறார்கள். அதன்படி, இந்த வருஷம் (2022), அவர்களின் 74 – ஆவது சுதந்திர தினமானது (Yom Ha’atzma’ut / யோம் ஹாட்சமோட்) ஆங்கில தேதியாகிய மே 5 அன்று கொண்டாடப்படுகின்றது. இந்நாளில், சகோ.கென்னத் இராசன் அவர்களின் ஆவணப்படமாகிய “Israel: Appointment with Destiny” என்பதன் தமிழாக்கமான “இஸ்ரயேல்: முன்குறிக்கப்பட்ட முடிவுடன் ஒரு சந்திப்பு” எனும் இச்சிறு புத்தகத்தைத் தாழ்மையுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
இதனைச் சகோதரர் 1990 களில், இஸ்ரயேலர்கள் மத்தியில் மிகுந்த வாஞ்சை மற்றும் வைராக்கியத்துடனும் பகிர்ந்தளித்திருந்தார். இஸ்ரயேலர்களிடையே இது ஓர் எழுச்சியை அக்காலத்தில் உண்டாக்கியது; மேலும், பலராலும் பாராட்டப்பட்டு, உயர்வாகப் பேசப்பட்டது. விரிவான விடயங்கள் நூலின் முன்னுரையில் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரயேல் பற்றிய புதிய தகவல்களும், அரிய புகைப்படங்களும் நமது புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன!
இச்சிறு புத்தகம் தேவன்பேரிலும், அவருடைய வாக்குத்தத்தங்கள்பேரிலுமான நமது விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும் என்கிற தேவ நம்பிக்கையில் ஜெபத்துடனும் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே!