யூதர்கள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்பட்டு, வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு வந்த காலம் அது. அதே சமயம் 7 – ஆம் சபையும் கூட்டிச்சேர்க்கப்பட்டு வந்துகொண்டிருந்தனர். அப்படிப்பட்ட உபத்திரவமான காலத்தில் யூதர்களோடு சேர்ந்து நமது சத்திய சகோதர சகோதரிகளும் உபத்திரவப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக போலந்து வேத மாணாக்கர்கள். இப்படியாக இரண்டாம் உலகப் போர் முன்பும், அதன் கோரமான நாட்கள் மத்தியிலும் நமது சர்வ வல்லமையுள்ள தேவன் எவ்வாறு அவர்களைக் கண்ணின் மணி போல பாதுகாத்து, சத்தியம் அங்கு வளர அநுக்கிரகம் பண்ணினார் என்பது பற்றியும், விசேஷமாக 4 பரிசுத்தவான்களின் பல அனல்மூட்டும் சாட்சியங்களுடன் சொல்லப்பட்ட “போலந்து வேத மாணாக்கரின் சிறு வரலாறு மற்றும் சாட்சி” எனும் இந்தச் சிறு புத்தகமானது, கடைசிக் காலங்களில் வாழும் நம்மைப் பலப்படுத்தி, அனல்மூட்டும் என்கிற நம்பிக்கையில், தமிழில், தாழ்மையுடனும் ஜெபத்துடனும் பகிர்ந்துகொள்கிறோம்.
இதில் அவர்களின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன!