அன்பானவர்களே! நாம் அறிவுபெருத்த காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். அறிவினைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் அழிவிற்கே வழிவகுக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் பாலியல் சம்பந்தமான அறிவும்.
நாம் பெலவீன மாம்சத்திலிருக்கின்றோம். எளிதில் இரகசியமாக, பாவத்தில் விழும் கண்ணியாக இப்பாலியல் சார்ந்த காரியங்கள் இருக்கின்றன. இக்காரியத்தில் பலர் இழுப்புண்டு புதுச்சிருஷ்டி ஜீவியத்தில் தொய்ந்துப்போய் எவ்வாறு மேற்கொள்வது என்று தெரியாமல் நிற்கின்றனர். இதில் வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் எனப் எப்பாகுபாடுமின்றி அனைவருமே அதன் தாக்கத்திற்குள்ளாகுகின்றனர்.
இக்கட்டுரையில் அறிவியல் பூர்வமாக எது நம்மைத் தூண்டுகின்றது பற்றியும், மென்பொருள் இயந்திரங்கள் வாயிலாக மனிதர்கள் காணும் ஆபாசவியல் இணையதளங்களுக்கு பின்னாடி எவ்வளவு பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் பற்றியுமான மனதை உருவக் குத்தும் கருத்துக்கள் அனைவரும் வாசிக்கும் வண்ணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெலவீனத்தை மேற்கொள்ள தங்களுக்கு உறுதுணையாக இக்கட்டுரை இருக்குமென தேவ நம்பிக்கையில் வழங்குகின்றோம்.