வாழ்க்கையையே மாற்றிப்போடக்கூடிய திருமணத்தை குறித்த முடிவை எடுக்கும்போது அதன் மீது இருக்கும் ஆர்வம் மிக தெளிவானதும் திடமானதுமாய் இருக்கிறது. ஆனால் காலம் கடந்துபோகும் போதோ இந்த உணர்ச்சிகரமான முடிவென்பது நாம் அதிக கவனம் செலுத்தாத, வாழ்க்கையின் ஒரு சாதாரண காரியமாக மாறிவிடக் கூடும். இது கவனிக்கப்பட வேண்டியதே!
“என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிற….” (ஆதி:2:23,24) வாழ்க்கை துணையோடு . அன்பும், அக்கறையும், அற்ப்பணிப்பும் மிகுந்த உறவையும், கருத்து பரிமாற்றத்தையும் எப்பொழுதும் தொடர இந்த சிறுபுத்தகம் விசேஷமாய் வேதவசனங்களின்படி அடிப்படையாக கொண்டு ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ளது.