வேதாகமத்தைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு சிறுபிராயமே ஏற்றது என்று வேதாகமம் போதித்தாலும், சிறுவர்கள் அதிலுள்ள செய்திகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு வேதாகமம் எளிமையாக எழுதப்படவில்லை. வேதாகமத்திலுள்ள போதனைகளையும், கதைகளையும் புரிந்துகொள்ளும்படியாக அவைகளை எளிய நடையில் கொடுப்பதே, “நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” என்ற புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும்.மேலும், இந்த புத்தகம் குழந்தைகளுக்கான மற்ற வேதாகம கதை புத்தகங்களைக் காட்டிலும் மிக அருமையானது என்பதை நிச்சயமாக நிரூபிக்கும் என்றும் வெளியீட்டாளர்கள் நம்புகிறார்கள். மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டதற்கு முன்னிருந்த காலம் துவங்கி, பத்மு தீவில் அப்போஸ்தலர் யோவான் கண்ட தரிசனம் வரைக்கும், வேதாகமத்திலுள்ள எல்லா கதைகளையும் இந்த புத்தகம் கொண்டுள்ளது.மேலும், “நிஜமாகும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” என்ற புத்தகத்திற்கு அதன் பெயரை தேர்வு செய்வதற்கான காரணத்தை இது விவரிக்கிறது. இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கதைகள், வசனங்களின் பொதுவான கருத்துக்களை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவியாகவும், வேதாகமத்தையும், அதின் தெய்வீக ஆசிரியரையும் நேசிக்கவும், அவரைக்குறித்து அறிந்துகொள்ளவும் இந்த புத்தகம் குழந்தைகளை அதிகமாக ஊக்குவிக்க உதவி செய்யும் என்பதே இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.