ஆரம்பக் கால வேதமாணவர் இயக்கத்தினுடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, 1914 ஆம் வருடத்தில் வெளி வந்த, தி போட்டோ டிராமா ஆப் கிரியேஷன் இருந்தது. இதன் தனித்தன்மை வாய்ந்த அசையும் புகைப்படங்கள், கைகளினால் வரையப்பட்ட கண்ணாடி வில்லைகள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்பட்ட குரளொலி ஆகியவை உலகமுழுவதும் உள்ள லட்சக்கணக்கானோருக்கு காண்பிக்கப்பட்டது.இதன் அனுகுமுறையானது கால வரிசைப்படி, மனுக்குலத்தின் அடிச்சுவடை சிருஷ்டிப்பிலிருந்து இந்நாள் வரையிலான வரலாற்றை, வேத நிகழ்ச்சிகளோடு மாத்திரமல்லாமல் சபை வரலாற்றோடும் உள்ளடக்கியுள்ளது. இம்மாதிரியான அனுகுமுறை இப்படைப்பை அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது. எப்படியெனில், இந்த எழுத்து நடை இளையவர்களால் எளிதில் புரிந்துக் கொள்வதற்கு கடினமாக இருந்தது.இந்த புத்தகத்தை இளவயது வாசகர்களுக்குத்தக்கதாக 1996- ஆம் வருடம் வாஷிங்டன், பிரிமெர்டனின் பெபெர்லி கிறிஸ்டினசென் என்பவர் எழுதினார். அவர் இதற்கு மூல நூலான போட்டோ டிராமா புத்தகத்தை அடிப்படையாகவும், உந்துதலாகவும் பயன்படுத்தினார். அதின் பெரும்பாலான அம்சங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. வசனப் பகுதிகள் அனைத்தும், குறிப்பிடாத பட்சத்தில் நியூ இண்டர் நேஷ்னல் வெர்ஷன் பதிப்பிலிருந்து குறிப்பிடப்படுகிறது.