நம்முடைய இலக்கான பரமநேசராகிய கிறிஸ்துவின் சாயலை அடைவதற்குப் பலியின் ஜீவியம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதைக்குறித்துத் தனிப்பட்ட ஜீவியத்தில் பேருதவியாக இருந்த ஒரு கட்டுரை தான் – பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா?
இது கிறிஸ்தவ கேள்விகள் என்னும் வலையொளி நிகழ்வு #1128, இந்தத் தலைப்பின் கீழ் ஒளிப்பரப்பப்பட்டதை தங்களின் ஆவிக்குரிய பிரயோஜனத்திற்காக தமிழில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எது தேவனானவருக்குப் பிரியமானது கீழ்ப்படிதலா அல்லது பலிசெலுத்துவதா? எந்த மனநிலையில் பலிசெலுத்தினால் தேவனானவரால் ஏற்றுக்கொள்ளப்படும்? பலிக்கென முழு யூத யுகமே இருந்ததே, அப்படியானால் தேவனானவர் எந்த நோக்கத்திற்காக பலி என்னும் சிலாக்கியத்தைக் கொடுத்தார்? கிறிஸ்துவின் வாழ்க்கையில் எது மேலோங்கி இருந்தது? அவர் எதனைக் கற்றுக்கொண்டார்? இதற்கான வேதாகம நிழல்கள்/உதாரணங்கள் இருக்கின்றனவா? போன்ற பல கேள்விகளுக்கு உகந்த வேதாகம வசன மேற்கோள்களுடன் ஆசீர்வாதமான வகையில் விடையளிக்கப்பட்டுள்ளது.