நமது ஆத்தும நேசரும் மீட்பரும் எஜமானுமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய தியாகம் நிறைந்த பூமிக்குரிய ஜீவியத்தின் கடைசி வாரமானது, ஒரு நாடகக் காட்சியினைப் போல அழுத்தமாக அசைவுற நகர்கின்றது.
ஆ! இந்த நாடகத்தின் பெரும்பகுதி நான்கு சுவிசேஷங்கள் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் எந்தவொரு சுவிசேஷத்திலும் அனைத்து விவரங்களும் ஒரே சீராகவும், ஒன்றாகவும், ஏகமாயும் வழங்கப்படவில்லை. அவைகள் இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமுமாகக் கூறப்பட்டுள்ளன. உண்மையான காரியங்களின் ஒவ்வொரு விளக்கமான வாக்கியத்தையும், ஒரே சீராகவும், ஒன்றாகவும், ஏகமாயும், ஒரு தடையற்ற ஓட்டத்தில் அவரை நேசிக்கும் ஜனங்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒரு நல்ல முயற்சியே இப்புத்தகம்.