நாம் வாழும் உலகமானது, மாபெரும் 2 உலக போர்களை சந்தித்துள்ளது. தற்காலத்தில், இனி இத்தகைய உலக போர் வராதபடி பல நாடுகள், பல உடன்படிக்கைகள் செய்தாலும், தேவன் அவரது சத்திய வசனத்தின் மூலமாக அர்மகெதோன் யுத்தத்தை(3 உலக போர்) ஏற்பாடு செய்துள்ளார்.
அதன் ஆயத்த நடவடிக்கைகள், அந்த ஆயத்த வேளையில் அந்திகிறிஸ்து அமைப்பின் பங்கு பற்றியும், அந்த அமைப்பின் வீழ்ச்சி பற்றியும், தேவனின் இராஜ்யம் ஆயத்தமாக ஏற்படும் உலக நாடுகள் மத்தியிலான யுத்தங்கள் பற்றியும், இந்த சுவிசேஷ யுகத்தின் சதாப்தத்தின் முடிவை பற்றியும் சத்திய வேதத்தில் தேவன் மறைத்து வைத்திருந்த இரகசியமானது, இந்த புத்தகத்தில் மிக தெளிவாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தேவனுக்கு நன்றி!